கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழா

வேதக்கோட்டைவிளை தூய தோமா ஆலய பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

Update: 2022-12-28 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள வேதக்கோட்டைவிளை தூய தோமா ஆலய 76-வது பிரதிஷ்டை மற்றும் அசன விழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு கிறிஸ்தவ செய்திகள் வழங்கல், வாலிபர் ஐக்கிய கூடுதல், ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை பிரதிஷ்டை ஆராதனை நடந்தது. இதில் சபை மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற அசன விருந்து வைபவத்தை சபை குரு ஜான்சாமுவேல் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அசன விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்