தூத்துக்குடியில்கிறிஸ்தவர்களின்கல்லறை திருநாள் பிரார்த்தனை
தூத்துக்குடியில்கிறிஸ்தவர்களின்கல்லறை திருநாள் பிரார்த்தனை நடைபெற்றது.
தூத்துக்குடியில் கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் பிரார்த்தனை புதன்கிழமை நடந்தது.
கல்லறை திருநாள்
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் இறந்த மூதாதையரின் ஆன்மாக்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறைத் திருநாள் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
அப்போது தங்கள் முன்னோர்களின் கல்லறைகளை புதுப்பித்து மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்களால் கல்லறைகளை அலங்கரித்தும் பிரார்த்தனை செய்வார்கள்.
பிரார்த்தனை
அதன்படி நேற்று கல்லறை திருநாளையொட்டி, தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலான கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவ மக்கள் தங்கள் மூதாதையரின் கல்லறைகளை கழுவியும், வெள்ளையடித்தும் சுத்தம் செய்தனர். தொடர்ந்து கல்லறையில் மலர்களால் அலங்கரித்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர். மாலையில் ஜார்ஜ் ரோடு கல்லறைத் தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
நிகழ்ச்சியில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.