சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா - 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2023-05-16 21:30 GMT

சோழவந்தான்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வருகிற 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வைகாசி திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்கு பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதை முன்னிட்டு தினசரி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி திருவிழா வருகிற 22-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெறும். தினசரி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய திருவிழாவாக வருகிற 30-ந் தேதி காலை பால்குடம், மாலை அக்னிசட்டி, இரவு பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தேரோட்டம்

வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல், ஜூன் 6-ந் தேதி தேரோட்டம், 7-ந் தேதி இரவு வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரி திருவிழா நடைபெறும். விழாவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசித்து செல்வார்கள்.

விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சோழவந்தான் போலீசார், தூய்மைப்பணி ஏற்பாடு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகின்றன. திருவிழா காலங்களில் பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றுக்கு செல்வதற்கு ஒரு பாதையும், வைகை ஆற்றில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு பாதையும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்