சோழம்பட்டி பழனி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சோழம்பட்டி பழனி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே சோழம்பட்டி பழனி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் முதல்கால யாகவேள்வி தொடங்கியது.இரவு பூர்ணாகுதி நடைபெற்றது. தொடர்ந்து நா.சீனிவாசனின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நேற்று 2-ம் நாள் காலை 7 மணிக்கு 2-ம் கால யாகபூஜை ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்று. காலை 10.15 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 11.30 மணிக்கு மூலவர் விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.