லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகாதீபவிழா

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மகாதீபவிழா

Update: 2022-12-08 19:03 GMT

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு பக்தோசி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் பக்தோசிதப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தங்க கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அதைத்தொடர்ந்து கோவில் நான்குகால் மண்டபத்தில் எழுந்தருளி சொக்கப்பனை கொளுத்துதலை கண்டருளி, மங்கள வாத்தியங்களுடன் சன்னதி தெரு, சுப்பாராவ் தெரு, பைராகி மடத்தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு வழியாக வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்