ஆறுமுகநேரிசிவன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
ஆறுமுகநேரியில் கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு சிவன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் கோவில் வளாகத்திற்குள் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சொக்கபனையை வழிபட்டனர். தீ எரிந்து முடிந்த பின்னர் சொக்கப்பனை கட்டைகளை பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு புனித எடுத்து சென்றனர்.