சொக்கலிங்கநாதர் கோவில் தேரோட்டம்

கடையம் அருகே ரவணசமுத்திரம் சொக்கலிங்கநாதர் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-02-03 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே ரவணசமுத்திரம் சொக்கலிங்கநாதர்- மீனாட்சி அம்பாள் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 7-ம் திருநாளான 1-ந் தேதி நடராஜர் சிவப்பு சாத்தி கோலத்திலும், நேற்று முன்தினம் வெள்ளைசாத்தி மற்றும் பச்சை சாத்தி கோலத்திலும் காட்சியளித்தார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (சனிக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், கோவில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) முருகன், ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்