சித்ரா பவுர்ணமி பூஜை விழா

சிவகிரி அருகே சித்ரா பவுர்ணமி பூஜை விழா நடைபெற்றது.

Update: 2023-05-07 19:57 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே தேவிபட்டணம் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கால்கோள் விழாவுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் காலை, மாலையில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் கோவில் பூசாரி சிவபெருமாள் ஏராளமான பக்தர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு சென்றார். பின்னர் தட்டாங்குளத்தில் புனித நீராடி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்