அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா
தாயில்பட்டி பகுதிகளில் அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
தாயில்பட்டி,
தாயில்பட்டி பகுதிகளில் அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
சித்திரை திருவிழா
தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண்குண்டாம்பட்டியில் கிணற்றடி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. கரகம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது.
அக்னி சட்டி ஊர்வலம்
மடத்துப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள், பால் ஊர்வலமாக எடுத்து முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதனைத்தொடர்ந்து அக்னி சட்டி ஊர்வலம், ஆயிரம் கண் பானை, முளைப்பாரி ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
மடத்துப்பட்டியில் உள்ள சித்தர் நகர் மகா முனீஸ்வரர் கோவிலிலும் குருபூஜை பெருவிழா நடைபெற்றது. கங்காரகோட்டை ஊராட்சியை சேர்ந்த கீழச்செல்லையாபுரத்திலும் பொங்கல் திருவிழா நடைபெற்றது.