திண்டிவனம்திந்திரிணீஸ்வரசாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்

திண்டிவனம் திந்திரிணீஸ்வரசாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

Update: 2023-04-25 18:45 GMT


திண்டிவனம், 

திண்டிவனத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணீஸ்வரசாமி கோவிலில் சித்திரை மாதத்தில் திருத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கும் பூைஜகள் நடந்து, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

பின்னர், கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டது. பின்னர், சாமி வீதிஉலா நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சூரிய நாராயணன், ஆய்வாளர் தினேஷ், கணக்காளர் சங்கர் மற்றும் உபயதாரர்கள் ராம்லால் ரமேஷ், ஆர்.பி.வி. பஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலில் ராதா குருக்கள் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்