சிதம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

காட்டுஎடையார் சிதம்பரேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-03 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள காட்டுஎடையார் கிராமத்தில் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், அனுக்ஞை பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை, யாகசாலை பூஜை, யாத்ராதானம் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் காட்டுஎடையார் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னர் சாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சமய சொற்பொழிவு, சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி, இரவு வாணவேடிக்கையுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெற்றது. அப்போது சாமிக்கு வீடு தோறும் படையல் செய்து பக்தர்கள் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழா குழுவினர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன் நின்று செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்