சின்னமனூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சி
சின்னமனூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்
சின்னமனூரில் அனுமதியின்றி விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர். இதனால் விவசாயம் பாதிப்படையும் என்று விவசாயிகள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் முத்துலாபுரம் விலக்கில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட கூடாது என்றும், தங்களது குறைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்குமாறும் கூறினர். இதையடுத்து கலெக்டரிடம் மனு கொடுக்க செல்வதாக கூறிவிட்டு கலைந்து சென்றனர்.