சின்னக்கருப்பர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

நத்தம் அருகே சின்னக்கருப்பர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2023-02-05 19:00 GMT

நத்தம் அருகே செங்குளம் கிராமத்தில் சின்னக்கருப்பர், சேவுகப்பெருமாள் அய்யனார், சங்கிலிகருப்பு, தொட்டிச்சி ஆகிய சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்நாள் கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, முதல் கால யாகசாலை, பூர்ணாகுதி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மேளதாளம் முழங்க ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்தமலை, காசி, ராமேசுவரம், திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அறுசுவை உணவு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, முன்னாள் தலைவர் சிவலிங்கம், புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை சேவுகமூர்த்தி, சின்னக்கருப்பர் வகையறாக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்