மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்கேந்தி ஆர்ப்பாட்டம்

ஆரணியில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்கேந்தி ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-29 14:09 GMT

ஆரணி

தமிழக சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பாக தமிழக அரசு தற்போது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆரணி மணிக்கூண்டு அருகே சிம்னி விளக்கேந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர தலைவர் தபேரேஷ் தலைமை தாங்கினார். நகர துணைத் தலைவர் யூசுப் முன்னிலை விகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் சிம்னி விளக்கேந்தி கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்