பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்

பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த முதியவாிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Update: 2022-12-29 18:45 GMT

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள கொழப்பலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 90). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு புளியமரத்தின் அடியில் அமர்ந்திருந்த 11 வயதுடைய 6-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் பார்த்து, சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்