மாணவிகளிடம் சில்மிஷம்

செய்யாறு அருகே மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியா் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-01 17:48 GMT

தூசி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 105 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆங்கில ஆசிரியர் முருகன் (வயது 43) என்பவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று, மாணவிகளிடம் விசாரணை செய்தனர்.

பின்னர் ஆசிரியர் முருகன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்