பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

கீரனூர் அருகே வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-05 19:13 GMT

தாலி சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உப்பிலியக்குடியை ேசர்ந்தவர் கலைச்செல்வன். ஓய்வுபெற்ற தபால் ஊழியர். இவரது மனைவி தமிழரசி (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டிற்கு வந்தனர். இதில் ஒருவர் தமிழரசி வீட்டிற்கு உள்ளே சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டில் இருந்த தமிழரசி முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை கத்தியால் அறுத்து கொண்டு வெளிேய ஓடி சென்றார். இதில் தாலி சங்கிலியின் சில துண்டுகள் வீட்டில் விழுந்தது. இதையடுத்து வீட்டின் வெளியே மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்த மற்ெறாருவருடன் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

வலைவீச்சு

இதற்கிடையே தமிழரசி திருடன்... திருடன்... என சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் தமிழரசி புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்