கடலூர் ஆற்காடு லுத்தரன் ஆலயத்தில் சிறுவர்களுக்கான ஞாயிறு ஆராதனை

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கடலூர் ஆற்காடு லுத்தரன் ஆலயத்தில் சிறுவர்களுக்கான ஞாயிறு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-12-04 18:45 GMT

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முழுவதும் ஆலயங்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனை செய்து கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் தொடக்க விழாவாக கடலூர் ஆற்காடு லுத்தரன் ஆலயத்தில் சிறுவர்களுக்கான ஞாயிறு ஆராதனை விழா நேற்று நடந்தது.

இதற்கு ஆயர் ராபர்ட் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சபை பேராயர் சாமுவேல் கென்னடி கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார். முன்னதாக சிறுவர்களின் வேத வசனங்கள், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. சிறுவர்களே நேற்றைய ஆராதனையை நடத்தினர். தொடர்ந்து வேதாகம ஐக்கிய சங்கம் சார்பில் வேத வசனம் கூறிய சிறுவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் சிறுவர் பள்ளி ஒருங்கிணைப்பாளர் பெர்ஸி கயல்விழி, கன்வீனர் ஜெசி மற்றும் திருச்சபை பஞ்சாயத்து குழுவினர், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்