குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-11-14 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. கூடலூர் தொடக்க கல்வி அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார். விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு இசை நாற்காலி, பலூன் உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. சதுரங்க போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவர் கோகுல்தாசுக்கு ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி ஊக்கத்தொகை, பரிசு வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வளர்ச்சி குழு சார்பில் திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கூடலூர் ஹெல்த் கேம்ப் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. டி.ஆர்.பஜார் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை ஆசிரியை ஆஷா ஜெனிபர் தலைமை தாங்கினார். குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்