தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா
தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் அருகே உள்ள சின்ன வெங்காயபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வழங்கப்பட்ட ஜவஹர்லால் நேருவின் முகமூடி அணிந்து குழந்தைகள் கலைநிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் செண்பகவள்ளி தலைமை தாங்கி குழந்தைகளுக்கு இனிப்பு, பிஸ்கட் வழங்கினார். ஆசிரியர் திவ்யா வரவேற்புரை கூறினார். முடிவில் துளிர் இல்ல பொறுப்பாளர் செண்பகம் நன்றி கூறினார்.