சூரியோதயா தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
சூரியோதயா தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
குடியாத்தம் சூரியோதயா நிதியுதவி தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெனீப்பர் பிலிப் தலைமை தாங்கினார். ஆசிரியர் ம.சுந்தரமூர்த்தி வரவேற்றார். பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் ஆசிரியை ராணி நன்றி கூறினார்.