சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது

சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்று மாக்கினாம்பட்டி அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி அறிவுரை கூறினார்.

Update: 2022-11-30 18:45 GMT

பொள்ளாச்சி

சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்று மாக்கினாம்பட்டி அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி அறிவுரை கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமை தாங்கி, 18 வயதிக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதன் அவசியம் குறித்து பேசும்போது கூறியதாவது:-

சாலை விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டுவதாலும், நடந்து செல்வதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணியவும், கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணியவும் வேண்டும் என்று குழந்தைகள் சொல்ல வேண்டும். குழந்தைகள் கூறினால் கண்டிப்பாக பெற்றோர்கள் கேட்பார்கள். சாலை விதிகளை மதித்து நடப்பதால் விபத்துக்களை தடுக்க முடியும்.

விபத்து இல்லாத பொள்ளாச்சி

ஆட்டோக்களில் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் 5 பேரை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும். அதற்கு மேல் குழந்தைகளை ஏற்றி செல்ல கூடாது என்று பெற்றோரிடம் கூற வேண்டும். 18 வயதிற்கு உட்பட்டவர்கள் போதிய அனுபவம் இல்லாமல் அதிக குதிரை திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும். எனவே சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா பொள்ளாச்சியை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. எடுப்பது குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி, ரவிக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்