குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது.
பாபநாசம்;
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி. கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது.பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, மகளிர் உதவி திட்ட அலுவலர் உமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரதிநிதி பரிமளா தேவி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பாபநாசம் ஒன்றியத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கு பாடுபடுவது, பாபநாசம் ஒன்றியத்தில் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் 2006- ன் படி குழந்தை திருமணம் இல்லாத வட்டாரமாக உருவாக்க பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.