திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு மயங்கி விழுந்த குழந்தைகள் -தவளை இறந்து கிடந்ததாக புகார்; போலீசார் விசாரணை
திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஐஸ்கிரீமில் தவளை இறந்து கிடந்தாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஐஸ்கிரீமில் தவளை இறந்து கிடந்தாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஐஸ்கிரீமில் தவளை
மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவில் வசித்து வருபவர் அன்பு செல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ. இவர்களுக்கு மித்ராஸ்ரீ, (வயது 8,) ரக்சனாஸ்ரீ (7) ஆகிய 2 மகள் உள்ளனர், ஜானகிஸ்ரீ தனது 2 மகள் மற்றும் உறவினர் மகள் தாரணி(4) ) ஆகியோருடன் நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு கடையில் 3 குழந்தைகளுக்கும் கோன் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார்
3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்
அதை சாப்பிட்ட 3 குழந்தைகளும் சிறிதுநேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினர். இதைதொடர்ந்து திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் 3 பேரையும் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் 3 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் போலீசில் ஜானகிஸ்ரீ புகார் செய்தார். அதில் குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீம் செத்த தவளை இருந்ததாக கூறியுள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஐஸ்கிரீமில் தவளை கிடந்ததா? என்று ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.