இறந்த தாயாருக்கு கோவில் கட்டிய பிள்ளைகள்

திருச்செந்தூரில் கொரோனாவால் இறந்த தாயாருக்கு பிள்ளைகள் கோவில் கட்டிகும்பாபிஷேகம் நடத்தினர்.

Update: 2023-04-23 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் கல்யாணகுமார். தனியார் பள்ளி ஆசிரியர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு ஜெய்சங்கரி (வயது 32) என்ற மகளும், ராகவேந்திரா (29) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுப்புலட்சுமி கடந்த 14-5-2021 அன்று இறந்தார்.

இதையடுத்து திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் உள்ள தங்களது நிலத்தில் மகன், மகளும் சேர்ந்து தாயார் சுப்புலட்சுமிக்கு கோவில் கட்டினர். தொடர்ந்து அங்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்