மின்வெட்டு நேரத்தில் நடந்த பிரசவம்.. அரசு மருத்துவமனையின் அவலம் - அதிர்ச்சியில் உறவினர்கள்

அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2022-06-26 07:45 GMT

கும்பகோணம்,

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. அன்மையில் தரம் உயர்த்தப்பட்ட இந்த மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் ,மின்வெட்டு நேரங்களில் யூ.பி.எஸ் உதவியுடன் விளக்கு வெளிச்சத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவர்வந்துள்ளார். அப்போது மின்சாரம் இல்லாததால் யூ.பி.எஸ் உதவியுடன் விளக்கு வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துள்ளனர். இது உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விளக்கு வெளிச்சத்தில் பிரசவம் பார்த்து அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. அதேபோல் காலில் பலத்த காயங்களுடன் வந்த ஒருவரை மருத்துவர்கள் இல்லாததால் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் 12கி.மீ சென்று சிகிச்சை பெற உள்ளதாக பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.எனவே இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க ஜெனரேட்டர் அல்லது இன்வெர்ட்டர் வசதிகளை ஏறபடுத்த்தி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்