குழந்தைகள் உரிமை விழிப்புணர்வு முகாம்

சேரம்பாடி அரசு பள்ளியில் குழந்தைகள் உரிமை விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-06-30 21:00 GMT


பந்தலூர்


பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், சிறார் நீதி சட்டம், குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கிருஷ்ணதாஸ் தலைமை தாங்கினார். சேரங்கோடு ஊராட்சி துணைத்தலைவர் சந்திரபோஸ் முகாமை தொடங்கி வைத்தார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், மாவட்டகுழந்தைகள் நல பிரிவு கள சமூக பணியாளர் தவமணி, தன்னார்வலர் மோகனா காந்தி, சேரம்பாடி சுகாதார ஆய்வாளர் கனையேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் குழந்தைகள் உரிமைகள், குழந்தைகள் பாதுகாப்பு, சிறார் பாதுகாப்பு, சட்ட வழிமுறைகள், கண்காணிப்பு முறைகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். முன்னதாக பள்ளி ஆசிரியர் கண்ணதாசன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்