சிறுமி பலாத்காரம்; மெக்கானிக் கைது

சிதம்பரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த மெக்கானிக் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-09-21 18:45 GMT

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கார்த்தி (வயது 37), மெக்கானிக். சம்பவத்தன்று இவர் அதே கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை சாக்லெட் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி, வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்