கடைகளில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
பண்ருட்டி கடைகளில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் தலைமையிலான அதிகாரிகள் பண்ருட்டி நகர பகுதியில் உள்ள பெட்டிக் கடைகள், ஓட்டல்கள், மளிகைக்கடைகள், செல்போன் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வேலை செய்கின்றனரா? என சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த உரிமையாளர்களிடம், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு சேர்க்கக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்த ஆய்வின்போது மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் லட்சுமி வீரராகவேல், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சைல்ட் லைன் முகுந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.