குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை நீதிபதி தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்த பிரசாரத்தை வோல்ட் விஷன் இந்தியா என்ற நிறுவனம் இணைந்து நடத்தியது. இந்த பிரசார வாகனத்தை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்களை அனைவருக்கும் வினியோகம் செய்வர். பெண்கள் பாதிக்கப்பட்டால் நீதிமன்றத்தை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் துண்டு பிரசுரத்தில் விளக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். இதில் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.