குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

வெள்ளக்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-10 17:07 GMT

ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட வெள்ளக்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருமலை தலைமை தாங்கினார். ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் வேதநாயகம் கலந்து கொண்டு பாலியல் குற்றம், போக்சோ சட்டம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து பேசினார்.

குழந்தைகள் நல குழு உறுப்பினர் கல்பனா, ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆகியோர், கலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆலங்காயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற உறுப்பினர் இந்துமதி குமார், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்