பஸ் மோதி குழந்தை பலி

தியாகதுருகம் அருகே பஸ் மோதி குழந்தை உயிரிழந்தார்.

Update: 2022-07-04 16:43 GMT

தியாகதுருகம் அருகே சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் மனைவி சித்ரா. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் தியாஸ்ரீயை அழைத்து வருவதற்காக 2-வது மகள் ஹரிணியுடன்(வயது 2½) தனியார் பள்ளி பஸ் வரும் இடத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த பள்ளி பஸ்சில் இருந்து மகள் தியாஸ்ரீயை இறக்கியபோது கீழே நின்ற ஹரிணி திடீரென பஸ்சின் முன்பு ஓடியது. இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை இயக்கியதாக தெரிகிறது. இதில் பஸ் மோதியதில் குழந்தை ஹரிணி, பாிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்