குன்னூர்,
குன்னூர் மாடல்ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் 11 நாட்கள் நவ நாள், திருப்பலியுடன் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடைசி நாளில் தேர்பவனி நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் நவநாள், திருப்பலி நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடைபெற்றது. இதையொட்டி குன்னூர் புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை ஜெயக்குமார், உதவி பங்கு தந்தை மெல்டஸ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி, ஆராதனை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பின்னர் அன்பின் விருந்து நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.