குழந்தை ஏசு ஆலய திருவிழா

சத்திரப்பட்டியில் குழந்தை ஏசு ஆலய திருவிழா நடந்தது.

Update: 2023-01-16 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் அற்புத குழந்தை ஏசு ஆலய திருவிழா நடைபெற்றது. இவ்விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவு, நற்கருனை ஆராதனை, உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆலய போதகர் ஞானசேகரன் அனைவருக்கும் பொன்னாடை மற்றும் மாலை அறிவித்தது வரவேற்றார். விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வண்டானம்கருப்பசாமி, அகிலாண்டபுரம் கிளைச் செயலாளர் லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்