குழந்தை இயேசு ஆலய திருவிழா

ஊட்டியில் குழந்தை இயேசு ஆலய திருவிழா நடந்தது.

Update: 2023-01-09 18:45 GMT

ஊட்டி,

ஊட்டி அப்பர் பஜாரில் குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 39-வது ஆண்டு திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் கோத்தகிரி மரியன்னை ஆலய உதவி பங்கு தந்தை ஜூட் அமலநாதன் மறையுரை நிகழ்த்தி திருப்பலி நிறைவேற்றினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மறை மாவட்ட பொருளாளர் ஸ்டீபன் லாசர், உதவி பங்கு தந்தைகள் பிரெட்ரிக், ஜோசப் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர். தொடர்ந்து மதியம் அசன விருந்து நடைபெற்றது. மாலை 3 மணிக்கு புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை சிஜோ ஜார்ஜ் தலைமையில் மலையாள மொழியில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு குன்னூர் புனித சூசையப்பர் ஆலய உதவி பங்கு தந்தை விமல் பாக்கியநாதன் திருப்பலியை நிறைவேற்றினார்.

இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை இயேசு சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை செல்வநாதன், பங்கு மக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்