சிறுமி கடத்தல்; வாலிபர் மீது புகார்

ஊத்தங்கரை அருகே சிறுமி கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டது.

Update: 2023-01-04 18:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அனுமன்தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்கண்ணா (வயது 21) என்பவர் தங்களது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்