தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு: சட்டம், ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை
சட்ட ஒழுங்கு தொடர்பாக தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
சென்னை,
கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடு, கார், கடைகளுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிறது தமிழகம் முழுவதும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் சட்ட ஒழுங்கு தொடர்பாக தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
சட்ட ஒழுங்கு குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனை காணொலி மூலம் நடைபெறுகிறது.மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உள்ளிட்டோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடைபெறுகிறது.
டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி தேவாசீர்வாதம் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.