முதல்-அமைச்சரின் கள ஆய்வு எதிரொலி: விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகாரிகள் மாற்றம்..!!

முதல்-அமைச்சரின் கள ஆய்வு எதிரொலியாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2023-04-30 12:26 GMT

கோப்புப்படம்

சென்னை,

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் நான் ஆய்வு செய்த தகவல்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என அதற்கு ஏற்ப பணிகளை முடக்கி விட்டு உள்ளீர்கள். அதுபோன்று செய்யாமல் அனைத்து பணிகளும் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டுமென மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இந்த மாவட்டங்களில் பணிகள் நன்றாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விழுப்புரம் மண்டலத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கள ஆய்வினைத் தொடர்ந்து அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக எஸ். செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ம. ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜி. சரஸ்வதி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக கோ.கிருஷ்ணபிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்