திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவாரூர்,
திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார்.
தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் காட்டூரில் கருணாநிதி நினைவாக ரூ12 கோடியில் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7000 சதுர அடி பரப்பில் ரூ 12 கோடி செலவில் திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. கோட்டத்தில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம் பழைய புகைப்படங்கள், திருமண மண்டபங்கள் உள்ளன. திறப்பு விழாவில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார்.
கலைஞர் கோட்டத்தில் கருணாநிதி சிலை, அவரது பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களும் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உடல்நிலை காரணமாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.