கரூரில் தொழில் அதிபர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடல்

கரூரில் தொழில் அதிபர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.

Update: 2022-07-01 19:26 GMT

கலந்துரையாடல்

கரூரில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜவுளித்தொழில், கொசுவலை உற்பத்தி, கயிறு உற்பத்தி, வர்த்தகம் மற்றும் உணவு தானியங்கள் உற்பத்தி, வாகனங்களுக்கான கூண்டு கட்டும் தொழில் ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தொழில் சங்கத்தினர் தங்களது தொழில்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், தங்களது கோரிக்கைகள் குறித்தும் பேசினர். தொடர்ந்து அது சம்பந்தமான கோரிக்கை மனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

கலந்து கொண்டவர்கள்

இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், இந்திய தொழிற்கூட்டமைப்பின் கரூர் தலைவர் வெங்கடேசன், கரூர் டெக்ஸ்டைல்ஸ் ஏற்றுமதி வளர்ச்சி சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், சிட்கோ தலைவர் சி.பாஸ்கர்.கே.வென்சர்ஸ் தலைவர் சுசீந்திரன், கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ராம்பிரகாஷ், அசோசியேஷன் ஆப் ஆட்டோமொபைல் கோச் பில்டர் கரூர் தலைவர் முருகானந்தம், மாநில கயிறு உற்பத்தியாளர் கூட்டமைப்பின் செயலாளர் பூச்சாமி, கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகத்தின் செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்