சென்னை எத்திராஜ் கல்லூரி முதல்வர் மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-21 06:05 GMT

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் கோதை (வயது 56), உடல்நலக்குறைவு காரணமாக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார். இந்த நிலையில் சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை உடல்நலக்குறைவால் நேற்று மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.

25 ஆண்டுகள் எத்திராஜ் கல்லூரியில் பணியாற்றி, 2019-ஆம் ஆண்டுமுதல் கல்லூரி முதல்வராகவும் பொறுப்பு வகித்து மாணவிகளின் நன்மதிப்பைப் பெற்ற கோதை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்