போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை - டாக்டர் ராமதாஸ்

போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2022-08-10 14:11 GMT

சென்னை,

போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) நியமிக்கப்படுவார்; போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வலுப்படுத்தப்படும்; சைபர் செல் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை!

போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் உருவாக்கப்படும்; போதைப் பொருள் வணிகர்களுக்கு ஜாமின் மறுக்கப்படும்; போதைப் பொருள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்பவையும் வரவேற்கத்தக்கவையே!

போதை ஒழிப்புக்கான முதலமைச்சரின் ஆணைகள் காவல்துறையினரால் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். போதை ஒழிப்பில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்சியர்கள் - காவல் அதிகாரிகள் கூட்டத்தை முதலமைச்சர் நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்