நெல்லையில் 727 புதிய பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

நெல்லையில் நடந்த விழாவில் ரூ.156 கோடியில் 727 புதிய பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-09-08 23:03 GMT

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் நெல்லை மாவட்டத்தில் ரூ.74 கோடியே 24 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 29 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ.156 கோடியே 28 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள 727 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி நெல்லை மாநகராட்சி சார்பில் ரூ.53 கோடியே 61 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட மேடை போலீஸ் நிலையம், மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரி சாலையில் பல்நோக்கு கூட்டரங்கம், ராமையன்பட்டி பகுதியில் 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், நவீனமயமாக்கப்பட்ட வ.உ.சி.மைதானம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.28 கோடி செலவில் பாளையங்கோட்டை, சேரன்மாதேவி, முக்கூடல், பாப்பாக்குடி ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடங்கள், ஏர்வாடி, பத்மநேரி, முன்னீர்பள்ளம், மூைலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் துணை வேளாண்மை விரிவாக்கம் இயக்க கட்டிடங்கள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.

சட்டத்துறை சார்பில் ரூ.4 கோடி 70 லட்சம் செலவில் நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 12 வகுப்பறைகள், 4 ஆசிரியர் அறைகள் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.4 கோடியே 39 லட்சம் செலவில் வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம், கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் ஆய்வு கட்டிடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூ.1 கோடியே 90 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடங்கள், வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறை சார்பில் ரூ.97 லட்சம் செலவில் அம்பை நகராட்சி ஆசிரியர் காலனியில் பூங்கா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அகஸ்தியர்புரத்தில் பூங்கா, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் ரூ.51 லட்சத்து 80 ஆயிரம் செலவில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் நூலக கட்டிடம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் திருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவமனை கட்டிடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது.

மேலும் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.72 கோடியே 10 லட்சம் மதிப்பில் இருதயம், நரம்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை கட்டிடம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.72 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக கட்டிடம், ஒன்றிய அலுவலக கட்டிடம், உயர்மட்ட பாலம், கலையரங்கங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அங்கன்வாடி கட்டிடங்கள், ரேஷன் கடைகள், பள்ளி சமையலறை கட்டிடங்கள், சாலை பணிகள், குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட 722 பணிகளுக்கும், அபிஷேகபட்டி கால்நடை பண்ணையில் ரூ.9 கோடியே 42 லட்சம் மதிப்பில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம் மற்றும் குஞ்சு பொறிப்பகம், ரூ.1 கோடியே 35 லட்சத்தில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அகஸ்தியபுரம் பகுதியில் உள்ள தகனம் மேம்பாட்டு பணி மற்றும் களக்காடு நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பாரதியார், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் நினைவு நுழைவுவாயில் மற்றும் கலையரங்கம் கட்டும் பணிக்கும் என மொத்தம் ரூ.156 கோடியே 28 லட்சம் மதிப்பில் 727 பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், அலெக்ஸ் அப்பாவு,

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ். லட்சுமணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், துணைத்தலைவர் செல்வலட்சுமி அமிதாப், முன்னாள் துணை மேயர் கா.முத்துராமலிங்கம், நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, பிரான்சிஸ், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் கே.எஸ்.தங்கபாண்டியன் (பாளையங்கோட்டை), ஸ்ரீலேகா அன்பழகன் (மானூர்), பூங்கோதைகுமார் (சேரன்மாதேவி), சவுமியா ஆரோக்கிய எட்வின் (நாங்குநேரி), மானூர் யூனியன் துணை தலைவர் நயினார் முகமது, இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் நாங்குநேரி இ.நடராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.காசிராஜன், இலக்கிய அணி செயலாளர் தாமஸ் அமிர்தராஜ், இ.என்.மனோஜ்.

தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆ.துரை, தி.மு.க. அயலக அணி துணை பொறுப்பாளர் சிங்கப்பூர் எஸ்.ஜெ.மகாகிப்ட்சன், தி.மு.க. நெல்லை மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், நமசிவாயம் என்ற கோபி, மாவட்ட துணை செயலாளர் ஆ.க.மணி, நெல்லை மாநகராட்சி வரிவிதிப்பு குழு மற்றும் நிதி குழு தலைவரும், மாநகர துணை செயலாளருமான எம்.சுதா மூர்த்தி, துணைசெயலாளர் அப்துல்கையூம், பொருளாளர் அண்ணாத்துரை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவனுபாண்டியன், இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவருமான ஜெகன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் அமிதாப்.

ஒன்றிய செயலாளர்கள் ‌சுடலைக்கண்ணு, (நாங்குநேரி மேற்கு) அன்பழகன் (மானூர் மேற்கு), அருள்மணி (கிழக்கு), ஜோசப் பெல்சி (ராதாபுரம் மேற்கு), போர்வெல் கணேசன் (மத்திய பாளையங்கோட்டை), ஆரோக்கிய எட்வின் (நாங்குநேரி கிழக்கு), ராஜாஞானதிரவியம் (வள்ளியூர் வடக்கு), பி.சி.ராஜன் (களக்காடு தெற்கு), செல்வகருணாநிதி (களக்காடு வடக்கு), பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, துணை தலைவர் சகாய புஷ்பராஜ், பேரூர் செயலாளர் தமிழ்வாணன், புளியங்குடி நகரசபை தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன், களக்காடு நகரசபை தலைவர் சாந்தி சுபாஷ், நகர செயலாளர் மணி சூரியன், துணை செயலாளர் சுபாஷ், கடையநல்லூர் யூனியன் தலைவர் சுப்பம்மாள்பால்ராஜ், ஒன்றிய செயலாளர் பா.சுரேஷ், ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜன், கடையநல்லூர் யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், தென்காசி யூனியன் துணைத்தலைவர் கனகராஜ் முத்துபாண்டியன், கடையநல்லூர் நகரசபை தலைவர் மூப்பன் ஹபீபுர் ரகுமான், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஆறுமுகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்