டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லி சென்றிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை வந்தடைந்தார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நள்ளிரவு டெல்லி சென்றார். சென்னையிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட முதல்-அமைச்சர், நள்ளிரவில் டெல்லிக்கு சென்றாா்.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரைச் சந்தித்து, புதிதாகத் தோவு செய்யப்பட்டதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முா்முவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்திலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். மாலை 4 மணி அளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார். நிறைவேற்றப்படாத பல தமிழக கோரிக்கைகளையும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார்.
இந்நிலையில் டெல்லி சென்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு (புதன்கிழமை) சென்னை திரும்பினார்.