தமிழ்நாட்டின் 17-வது காட்டுயிர் காப்பகமாக காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகத்தை அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் 17-வது காட்டுயிர் காப்பகமாக காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தை தமிழ்நாட்டின் 17-வது காட்டுயிர்க் காப்பகமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.