சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை
ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற அரசு வாரிய தேர்வில் கணினித் துறையை சேர்ந்த வேதமடிவால் என்ற மாணவி 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். பெரும்பாலான மாணவ, மாணவிகள் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சித்தீஸ்வரர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் கே.குப்புசாமி, பொருளாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன், செயலாளர் ஜி.செல்வகுமார், தாளாளர் டி.தரணிபதி, கல்லூரியின் முதல்வர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் பாராட்டி, வாழ்த்தி தெரிவித்தனர்.
அப்போது இயக்குனர்கள் எம்.சங்கர், எஸ்.ஆதிகேசவன், எஸ்.ரமேஷ், மானக்சந்த், சி.பி.எம்.கருணாகரன் டி.மோகன் குமார், சி.ஆர்.ஆசிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.