கோழிக்கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் இன்று(புதன்கிழமை) தொடங்கி 14 நாட்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

Update: 2023-01-31 18:45 GMT


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இருவார தடுப்பூசி முகாம்

கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ராணிகட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தி அதன் மூலம் கோழி வளர்ப்போருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் இருவார தடுப்பூசி முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி கால்நடை பராமரிப்பு துறை மூலம் இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

இறப்பை தவிர்த்து

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோழிகளை வளர்க்கும் அனைத்து பொது மக்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்தி கோழிகளில் வெள்ளைக்கழிச்சல் நோயின் காரணமாக ஏற்படும் இறப்பை தவிர்த்து கோழி வளர்ப்பில் அதிக லாபம் பெறலாம்.

மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி விபரம் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்