டிரைவருக்கு நெஞ்சுவலி-பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்

டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதும் பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்.

Update: 2023-05-07 18:45 GMT

சிங்கம்புணரி

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சிங்கம்புணரி வழியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு 45 பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை பொன்னமராவதி தாலுகா மதியானி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கருப்பையா ஓட்டினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்பீல்டு மேடு அருகே பஸ் சென்றபோது திடீெரன டிரைவர் கருப்பையாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் பஸ்சை மெதுவாக இயக்கி சிங்கம்புணரி பஸ் நிலையத்திற்குள் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். டிரைவர் கருப்பையாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிர்தப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்