மாவட்ட அளவிலான செஸ் போட்டி
மாவட்ட அளவிலான செஸ் போட்டி 2 நாட்கள் நடக்கிறது.
காரைக்குடி,
உலக செஸ் கழகம் சார்பில் உலக நாடுகளுக்கிடையேயான 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 28-ந்தேதி முதல் தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 189 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த போட்டியை 3 நாட்கள் நேரில் பார்வையிடும் வாய்ப்பை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வீரர் மற்றும் ஒரு வீராங்கனைக்கு வழங்க அகில இந்திய செஸ் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி காரைக்குடி கலைவாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதில் 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த போட்டியில் வெற்றி பெறும் ஒரு வீரர் மற்றும் வீராங்கனை ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட வாய்ப்பு வழங்கப்படுகிறது.