பள்ளி மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டி

நாகையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே செஸ் போட்டி நடந்தது.

Update: 2022-07-25 17:34 GMT

வெளிப்பாளையம்:

சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பள்ளிகளுக்கு இடையிலான செஸ் போட்டி நாகை சர்ஐசக் நியூட்டன் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆலோசகர் ராமதாஸ் வரவேற்றார். இயக்குனர் சங்கர், சர்ஐசக் நியூட்டன் கல்வி குழுமங்களின் தாளாளர் ஆனந்த், செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்